சமையல் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ₹200 விலை குறைக்கப்பட்டது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ₹100 விலை குறைப்பு செய்யப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை.