இந்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை கடந்த 3ம் தேதி இரவு சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இதனிடையே நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.