10ம் வகுப்பு மாணவனுடன் எஸ்கேப்! ரூம் போட்ட 40 வயது லலிதா! கதறும் அளவுக்கு கோர்ட் கொடுத்த தீர்ப்பு!

Published : Nov 07, 2025, 10:28 AM IST

திருவாரூரில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அங்கன்வாடி ஊழியரான லலிதா என்பவருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் திருவாரூர் மகளிர் நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. 

PREV
14

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்த தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா (40). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை நைசாக பேசி ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ரூம் எடுத்து தங்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

24

மகனை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பள்ளி மாணவனுடன் இருந்த லலிதாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

34

இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4 பிரிவுகளின் கீழ் குறிப்பிட்ட ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

44

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளி லலிதாவை திருச்சி பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த லலிதா கதறி அழுதார்.

Read more Photos on
click me!

Recommended Stories