விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்ல... தூக்கி ஓரம் போடுங்க..! திமுகவை தோற்கடிக்க இந்த கூட்டணியே போதும்.! இபிஎஸ்-க்கு அட்வைஸ்.!

Published : Nov 07, 2025, 11:29 AM IST

அதிமுக ஒருகிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற தோற்றத்தை இபிஎஸ் உருவாக்கியது தவறு என்றும், இது கட்சியின் செல்வாக்கை பாதித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 

PREV
16
தவெக பொதுக்குழு கூட்டம்

அதிமுக ஒருகிணைந்தால் மட்டுமே வெற்றி என தொடர்ந்து கூறி வரும் கே.சி.பழனிசாமி தனித்து நின்று 2016ல் ஆட்சி அமைத்த கட்சி விஜய் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே வெல்லமுடியும் என்ற நிலையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியது தவறு என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: தவெக பொதுக்குழு கூட்டத்தில் தனித்து போட்டி என்றும், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் இந்த தேர்தலில் போட்டி என்றும் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதிமுக என்கிற கட்சியை புறக்கணித்து, தான் மட்டுமே எதிர்க்கட்சி, தனியாக போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்க முடியும், விஜய் தான் முதலமைச்சர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

26
எடப்பாடி பழனிசாமி Vs தவெக விஜய்

சட்டமன்றத்தில் தவெகவுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கூட இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்காக வரிந்துகட்டி பேசினார். அதற்காக நன்றி சொல்லியோ, அதை நினைவு கூர்ந்தோ அல்லது தவெகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டது என்று கூட குறிப்பிட்டு சொல்லவில்லை. இது எடப்பாடிக்கு மிகப்பெரிய அவமானம் அல்லவா?

36
வெற்றிக்கு இந்த கூட்டணியே போதும்

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தவெக என்ற கட்சி உருவாக்கப்பட்டதை எப்படி கமல்ஹாசன் கட்சி துவங்கியதையும், ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதையும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றோமோ, அதுபோல அதிமுக என்கிற கட்சியை வலிமைப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இருந்தாலே போதும் நாம் வென்றுவிடுவோம் என்று விஜய்யை புறம்தள்ளி களத்தை திமுகவுக்கும் அதிமுகவுக்குமானதாக அமைத்திருக்க வேண்டும்.

46
திமுக VS அதிமுக

திமுக VS அதிமுக என்று களம் அமைந்தால் வெல்வது அதிமுகவாக தான் இருக்கும். அதனால் தான் ஸ்டாலின் அவர்கள் களத்தை திமுக VS பாஜக என்று அமைக்கிறார். அதேபோல தனித்து நின்று 2016ல் ஆட்சி அமைத்த கட்சி விஜய் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே வெல்லமுடியும் என்ற நிலையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியது தவறு. அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலைப்பாட்டை கட்டமைத்திருந்தால் விஜய் தானாக இந்த கூட்டணிக்கு வந்திருப்பார். ஆனால் "பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று எடப்பாடியும் "விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும்" என்று ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் போன்றவர்கள் வரிந்து வரிந்து அழைத்ததும் அதிமுக மீது பொதுமக்களுக்கு இருந்த அபிப்ராயத்தை பெருமளவு பாதித்துவிட்டது.

56
எடப்பாடி பழனிசாமி

இதே தவறை தான் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் செய்தார். மெகா கூட்டணி அமைப்பேன் என்று நாடாளுமன்ற தேர்தலின் போது சொன்னார் ஆனால் எதிர்பார்த்ததை போல கூட்டணி அமையாததால் ஆரம்பத்திலேயே தொண்டர்கள் உற்சாகம் இழந்துவிட்டார்கள். தற்பொழுதும் அதே போல மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் வாக்காளர் பட்டியல் பூத் வேலைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கூட்டணிக்கு யாரும் வரவில்லை, இன்றைய தேதிக்கு அதிமுக-பாஜக கூட்டணி மட்டும் தான் அதிலும் பாஜகவால் வாக்கு இழப்பு தான் உள்ளது, அவர்களால் 5% வந்தால் 10% வெளியே செல்கிறது. மற்ற கட்சிகளின் நிலைப்பாடும் உறுதியாக தெரியவில்லை.

66
அரவணைத்து செல்லவாரா எடப்பாடி?

எனவே இனிவரும் காலங்களிலாவது ஒரு கட்சியை வலிமைப்படுத்த வேண்டும், நீக்கங்களை தவிர்த்துவிட்டு கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் அதிமுக வென்றுவிடும் என்ற நம்பிக்கை வரும் திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்று உருவாக்க வேண்டும். இந்த முறை ஆட்சிக்கு வராவிட்டால் எடப்பாடியின் தலைமை கேள்விக்குறியாகிவிடும். எனவே ஜாக்கிரதை உணர்வோடு விட்டுக்கொடுத்து எல்லோரையும் அரவணைத்து செல்லவாரா எடப்பாடி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories