தேனாம்பேட்டை அப்போலோவிற்கு திடீர் மாற்றம்? காரணம் என்ன? முதல்வரின் உடல்நிலை எப்படி இருக்கு?

Published : Jul 22, 2025, 08:33 AM ISTUpdated : Jul 22, 2025, 09:05 AM IST

தொடர் பயணங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று நடைப்பயிற்சியின் போது தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

PREV
13
தமிழகம் முழுவதும் சுற்றி வரும் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பொதுமக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கால் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் தொடர் பயணங்களால் உடல் நிலையானது பாதிப்பு ஏற்பட்டது. இருந்த போதும் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். 

அந்த வகையில் நேற்று காலை நடைப்பயிற்சியில் போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். அடுத்ததாக அறநிலையத்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு உதவிட்டங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.

23
முதலமைச்சருகுக திடீர் தலைசுற்றல்

அப்போது திடீரென மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 

முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றுல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து முதல்வரின் உடல்நிலை பாதிப்புகளை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் முதலமைச்சரின் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தனர். 

33
தேனாம்பேட்டை மருத்துவமனையில் ஸ்டாலின்

நேற்று முதலமைச்சர் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஒரு சில பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories