சிவகங்கை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 5000 க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கான முகாம் நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதி உடைய 18 - 40 வயதுக்குட்பட்டோர் இதில் பங்கேற்கலாம்.
தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்கி வருகிறது. இதனால் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலையானது கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இளைஞர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி சென்று வரும் நிலையில் சொந்த ஊரிலேயே வேலை கிடைக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வரும் சனிக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
24
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 26.07.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை அரசு மகளிர் கலைக்கல்லூரி காஞ்சிரங்கால், சிவகங்கை வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
சிறப்பு அம்சங்கள்
100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000 -த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்தபட்ச மாத ஊதியம் 10,000 முதல் .25,000
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
சுயதொழில் தொடங்குவதற்கு தமிழக அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் Candidatelog- இல் தங்களது சுய விபரங்களை முன்பதிவு செய்யவும்,