79வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாகவும், நேர்த்தியாகவும் காட்சியளித்தார். அப்போலோவில் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பிட்டாகக் காட்சியளித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது அனைவரது கவனத்தையும் சுண்டி இழுத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அந்த அளவிற்கு சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் முதலமைச்சர் காணப்பட்டார். 72 வயது நிரம்பியவரா என சந்தேகப்படும் அளவிற்கு மிகவும் பிட் ஆகவும் அதே நேரத்தில் மிக நேர்த்தியான ஆடை அணிந்து அதற்கு ஏற்ற சரியான கண்ணாடியும் அணிந்து வந்தது மிக சிறப்பாக காட்சியளித்தது என்று சொல்லலாம்.
23
கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய ஸ்டாலின்
79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் வழக்கமாக முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் இடத்திற்கு காவல்துறை வீரர்கள் அணிவகுப்போடு கெத்தாக வந்து இறங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அங்கிருந்து தலைமை காவலரின் வாள் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு கொடி ஏற்றும் மேடைக்கு வந்து சேர்ந்த ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் பிரம்மாண்ட கொடி மரத்தில் கயிறை பிடித்து இழுத்து கொடியேற்றினார்.
33
தலைவா- விஜய்க்கு டப் கொடுத்த ஸ்டாலின்
அப்போது டிவி கேமரா ஆங்கில் தூரத்திலிருந்து படப்பிடிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூம் செய்து சென்ற போது அசப்பில் தலைவா படத்தில் நடிகர் விஜய் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து பிட்டாக காட்சியளிப்பார். அதேபோன்று எண்ணத்தை பார்ப்பவர்கள் பலருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும்போது தோன்றியது.
கடந்த வாரம் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் சோர்வாகவும் தளர்ந்தும் காணப்பட்டார். ஆனால் தற்போது ஒரு வார கால இடைவெளிக்குள் மீண்டும் பிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் காட்சி அளித்தது திமுக இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் தொண்டர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.