தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர், அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதல்-அமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.