ஓய்வூதியம் அதிரடியாக உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்.! சுதந்திர தின விழாவில் குஷியான அறிவிப்பு

Published : Aug 15, 2025, 09:28 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். விடுதலைப் போராட்ட வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
சுதந்திர தின விழா- முதலமைச்சர் கொடியேற்றினார்

 சுதந்திர தினத்தையொட்டி  சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காலை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

23
ஓய்வூதியத்தை அதிகரித்த ஸ்டாலின்

இதனை தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து ‘சல்யூட்’ செய்தார் .  தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என கூறினார். 

வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள் முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாதன் சேதுபதியின் வழித்தோன்றல்கள் சிவகங்கை மருத சகோதரர்கள் வழி தோன்றல்கள் மற்றும் வாவுசி வழித்தோன்றல் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

33
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உட்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம் மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். 

Read more Photos on
click me!

Recommended Stories