ஒரு கிலோ வெங்காயம் விலை இனி இவ்வளவு தான்.! அதிரடியாக குறையப்போகுது.! வெளியான சூப்பர் செய்தி

First Published | Nov 8, 2024, 2:55 PM IST

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சமீபத்தில் அதிகரித்து பின்னர் குறைந்துள்ளது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போட்டி போட்டு உயர்ந்த காய்கறி விலை

காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வது சாத்தியமில்லாத காரியம், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவையானது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில்  தக்காளியும் வெங்காயமும் போட்டி போட்டி விலையானது உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையானது. 

இதனால் கிலோ கணக்கில் இந்த இரண்டு காய்களையும் வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே வாங்கி செல்லும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக பண்ணை பசுமை மையங்களில் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்தை விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 45 ரூபாய்க்கும் விற்பனையானது.

onion

வெங்காயம், தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

இதே போல மத்திய அரசும் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தது. அதன் படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் வெங்காயத்தை கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களிக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பி வருகிறது. அதன்படி சென்னைக்கும் 800 டன் வெங்காயம் அனுப்பவிவைக்கப்பட்டது பொதுமக்கள் கூடும் இடத்தில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது கட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை தழைகீழாக மாறிவிட்டது.
 

Latest Videos


குறைந்த தக்காளி விலை, உயர்ந்த வெங்காயம் விலை

அதன் படி தற்போது 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலையோ உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ 80 முதல் 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி தமிழக அரசின் பண்ணை பசுமை மையத்தில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாசிக்கில் இருந்து வருகிறது வெங்காயம்

இதனை இன்னும் குறைவான விலையில் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடந்த மாதம் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல தற்போதும் குறைவான விலையில் விற்பனை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசும் வெங்காயத்தின் விலைய கட்டுப்படுத்த நாசிக்கில் இருந்து ரயில்களில் வெங்காயத்தை அனுப்பி ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Vegetables Price Today

கோயம்பேட்டில் காய்கறி விலை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

click me!