திருப்புவனம் அஜித்குமார் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான வழக்காகும். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய வந்தவர் அஜித்குமார் (வயது 29), கோயிலுக்கு வந்த நிகிதா என்பவரின் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் விசாரணையின்போது சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். விசாரணையின்போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.