நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தபோது: பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அரசுக்கு ஏற்றாற்போல வேஷம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுகவை விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் நடை பயணத்தின் போது ஓபிஎஸ்ஐ சந்தித்தது அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாஜக கூட்டணி கலகலத்து போய்விட்டது. ஒரே ஒரு சந்திப்பையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி அலறி பிரிந்து விட்டது. பாஜக ஒருவரை கூட்டணியில் சேர்க்க முதலில் அவரை அச்சுறுத்த வேண்டும். பின்னால் ஆசை வார்த்தை அவருக்கு கூற வேண்டும். அடுத்ததாக ஓபிஎஸ்-ஐ போல் அவமானப்படுத்த வேண்டும். இடி, ஐடி துணையோடு இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது என விமர்சித்தார்.