திருத்தணியில் 4 வயது சிறுவன் மாத்திரை சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கண் முன்னே சிறுவன் துடிதுடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக வாயில் எதாவது பொருளை போடுவதன் போது ஏற்படும் மூச்சு அடைத்து உயிரிழப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நெல்லையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆசையாக விரும்பி சாப்பிட்ட ரம்டான் பழத்தின் கொட்டை தொண்டையில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போ பல இடங்களில் குழந்தைகள் நாணயம், பொம்மைகள், ஊசி, பொத்தான்கள் அல்லது பிளாஸ்டிக் துண்டுகள் அடைத்துக்கொள்ளும் சம்பவம் ஏற்படுகிறது.
24
மூச்சு திணறி உயிரிழந்த சிறுவன்
மேலும் மொபைல் போனின் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை ஷாக் அடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. எனவே குழந்தைகள் வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சிறுவன் ஒருவன் மாத்திரை சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தனியை சேர்ந்த நெசவு தொழிலாளியான வேலு மற்றும் சசிகலாவின் 4 அரை வயது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். சிறுவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தாயார் நேற்று இரவு பாதி மாத்திரை கொடுத்துள்ளார். அதனை அந்த சிறுவனும் போட்டுள்ளார்.
34
மூச்சை நிறுத்திய மாத்திரை
ஆனால் அந்த பாதி மாத்திரை சிறுவனின் தொண்டையில் சிக்கியதில் மூச்சு திணறியுள்ளது. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் சிறுவன் திணறியுள்ளான். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் குழந்தையின் தொண்டை குழியில் சிக்கிய மாத்திரை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் கண்கள் மேலே சொருகியுள்ளது.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை உறவினர்கள் தூக்கி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் மூச்சு திணறி இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் கண் முன்பே சிறுவன் துடி துடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை கவனமோடு கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தைகளின் தொண்டையில் சிக்க கூடிய பொருட்களை கையில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.