முதல்வர் அண்ணாச்சி.. சொன்னது என்னாச்சி.. நெல்லை ஸ்டைலில் ஸ்டாலினை அலறவிட்ட நயினார்

Published : Aug 22, 2025, 10:26 PM IST

ஸ்டாலின் அண்ணாச்சி நீங்க சொன்ன வாக்குறுதி என்னாச்சி என முதல்வருக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

PREV
13
பாஜக பூத் கமிட்டி மாநாடு

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அளவிலான பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று தலைமை வகித்தார். மாநாட்டில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “வாக்குறுதி கொடுப்பது திமுகவினரின் வழக்கம், தேர்தலுக்கு பின்னர் அதனை மறுப்பது தான் அவர்களின் பழக்கம்.

23
முதல்வரை கேள்வி கணைகளால் துளைத்த நயினார்

மீனவ மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்றீர்களே, பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே, மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்னீர்களே, சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்று சொன்னீர்களே அண்ணாச்சி, நீங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னாச்சி? என்று நெல்லை தமிழில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

33
அமித்ஷா முன்னிலையில் மாஸ் காட்டிய நயினார்

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே தான் போர். திமுக ஆட்சி ஒரு குடும்ப ஆட்சி, பாரதிய ஜனதா ஆட்சியோ மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சியில் 29 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் தமிழ்நாடு முதல்வரோ சாரி என்று சொல்லிவிடுகிறார் என்று விமர்சித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories