அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோதுவது பாஜகவின் அஜெண்டா! அன்வர் ராஜா பகீர்!

Published : Jul 21, 2025, 11:26 AM IST

முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். பாஜகவின் நோக்கம் அதிமுகவை அழிப்பது தான் என்று அவர் தெரிவித்தார்.

PREV
14

அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின். நான் சந்தர்ப்பவாதி அல்ல கொள்ளைவாதி. பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை கூர்மை படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதிமுகவில் சீரழிக்க வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணி வைத்துள்ளது. தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக.

24

மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என கூறவில்லை. நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று 10 நாட்களாக கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை. கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இபிஎஸ்-ஆல் கூற முடியவில்லை. பாஜக - அதிமுக கூட்டணி முதல் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அமித்ஷா ஒருமுறை கூட கூறவில்லை. NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்; அக்கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்றுதான் சொல்கிறார்.

34

அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகலைவ் சேர்ந்தவர் முதலமைச்சராகிடுவார். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல. அதிமுகவை அழிப்பதை பாஜக நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்றார்.

44

பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக எனது ஆதங்கத்தை பலமுறை தெரிவித்தும் அதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. பலமுறை தன் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அடுத்த சாய்ஸ் திமுக தான் அதனால் தான் இணைந்தேன் என்றார். ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். அதிமுகவில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை, இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் இணையான தலைவர்கள் இல்லை, இம்முறைந்து 15 சதவீத கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வெல்லும். கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை திமுகவில் இணைத்து கொண்ட முதல்வருக்கு நன்றி என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories