தமிழகத்தில் தலைநகர் சென்னை முதல் குக் கிராமங்கள் வரை அரசு பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 20,000க்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டிஎன்எஸ்டிசி, எஸ்இடிசி, எம்டிசி வகையான பேருந்துகள் உள்ளன. இதில், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், கோவை, சேலம் என எட்டு போக்குவரத்துக் கழகங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறையின் அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.