இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா பழைய கோட்டையில் மேலப்பாளையம் சிற்றுாரில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவரது நினைவு நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.