AIADMK
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் விசுவநாதனும் பங்கேற்றிருந்த நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
Natham Viswanathan
இதையடுத்து கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறி வீட்டில் ஓய்வெடுக்க சென்ற நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று இரவு 9 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பியல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியால் தொண்டர்கள் அதிர்ச்சி!
i Periyasamy
அதேபோல், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.