Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் முக்கியமான 6 இடங்களில் இன்று மின்தடை!

First Published | Jul 31, 2024, 8:15 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேளச்சேரி, பல்லாவரம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Power Cut

வேளச்சேரி:

வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோயில் தெரு, ஜகன்னாத புரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் குடியிருப்புகள்.

அடையாறு: 

பெசன்ட் நகர், ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சேரி சாலை, காந்தி நகர் கிரசன்ட் அவென்யூ சாலை, கிரசன்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி சாலை, மருந்தீஸ்வர் நகர், எல்பி சாலை, கால்வாய் வங்கி சாலை, கேபி நகர் 1-3 பிரதான சாலைகள், கேபி நகர் 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, பிவி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் சாலை, பக்தவத்சலம் 1வது தெரு.

Tap to resize

Power Shutdown Today

பல்லாவரம்:

திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு மற்றும் ஆர்பி ரோடு மற்றும் புருசோத்தமன் நகர் பகுதி.

Today power Cut

வியாசர்பாடி:

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புது நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட், சென்ட்ரல் கிராஸ் தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1வது- மற்றும் 42 தெரு, சாமியார் கார்டன், பள்ளத் தெரு 1-3வது தெரு, உதய சூரியன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.

Today Power Shutdown

ஆவடி

பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம்.
 

Power Shutdown in Chennai

தாம்பரம்:

ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்க அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!