தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடியில் இருக்கும் எழில் கொஞ்சும் நகரம். இந்த கோடையில் விசிட் அடிக்க வேண்டிய இடங்களில் கோவையில் உள்ள சில இடங்கள் குறிப்பிடத்தக்கவை. அதில் ஊட்டி, பொள்ளாச்சி தவிர்க்க முடியாதவை. இவை தவிர கோவையில் ரயில்பயணங்களும் புதுவித அனுபவத்தை வழங்குகின்றன. மாயாஜாலமான உணர்வுகளை தூண்டக்கூடிய ரயில் தடங்கள் கோயம்புத்தூரில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
26
சென்னை - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்
பச்சை வயல்கள், அழகான கிராமங்கள், சிறிய நகரங்களில் அழகிய காட்சிகளை காண்பதற்கு சென்னை டூ கோயம்புத்தூர் ரயில் வழித்தடங்களில் பயணிக்கலாம். தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் எழிலை கண்டு உணர கோயம்புத்தூர் ரயில் பயணத்தை சென்னையில் இருந்து மேற்கொள்ளலாம். கோயம்புத்தூரில் வழியெங்கும் விடியற்காலை வெயிலானது தங்கக் கதிரை போல ஜொலிக்கும். அதை ரசித்தபடி கோவை வந்தடையலாம்.
36
மங்களூர் கோயம்புத்தூர் பாதை
மங்களூர்-கோயம்புத்தூர் வழித்தடத்தில் ரயிலில் பயணம் செய்வது கோடையில் சிறந்த தேர்வாக இருக்கும். தூத்சாகர் நீர்வீழ்ச்சி முதல் அடர்ந்த காடுகள் வரை எழில் கொஞ்சும் வழிப்பாதை மனதை கவரும். சக்லேஷ்பூர் என்ற இடம் அழகிய பள்ளத்தாக்குகள் கொண்டவை.
பெங்களூரு பரபரப்பான நகரமாக இருந்தாலும் அதை சுற்றி அழகுக்கு பஞ்சமில்லை. வணிகர்கள் சதாப்தி எக்ஸ்பிரஸை அதிகம் பயன்படுத்துவார்கள். இது இடையில் நிற்காது. சேலம் முதல் ஈரோடு வரை சில பாதையில் வயல்களும், மலையும் மனதை இலகுவாக உணரவைக்கும்.
56
ஹைதராபாத்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்
ஹைதராபாத் டூ கோயம்புத்தூர் வரையிலான ரயில் பயணம் இருமாநிலங்களின் அழகை நமக்கு கண்முன் காட்டுகிறது. ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இரண்டும் பல அழகிய காட்சிகளுக்கு பெயர் பெற்றது.
66
பாலக்காடு-கோயம்புத்தூர் பாதை
கேரளாவே அழகிய பாதை தான். பாலக்காடு-கோயம்புத்தூர் பாதை சொல்லவே வேண்டாம். எழில் கொஞ்சும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக போகும்போது சுரங்கப்பாதையான பாலக்காடுக்கு செல்ல முடியும். தேயிலைத் தோட்டங்கள், வயல்கள், மசாலாப் பொருட்கள் வாசனை என கேரளா டூ கோவை பயணம் தனி அனுபவமாக இருக்கும்.