கொங்கு பகுதியை கதி கலங்க வைத்த தொடர் கொலைகள்.! குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? - யார் இவர்கள்

Published : May 19, 2025, 02:10 PM IST

ஈரோட்டில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பின்னர், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

PREV
15
கொங்கு மண்டலத்தில் தொடர் கொலைகள்

திருப்பூர், பல்லடம், ஈரோடு என தோட்டத்தில் தனியாக உள்ள வயதானவர்கள் தாக்கி அடுத்தடுத்து தொடர் கொலை சம்பவம் நடைபெற்றது அந்த பகுதி மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்து பகுதியில் விவசாய தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதியினர் ராமசாமி-பாக்கியம்மாள் இருவர் கடந்த மே மாதம் 1ம் தேதி படுகொலை செய்து, பாக்கியம்மாள் கழுத்தில் இருந்து தாலிக்கொடி, தோடு,வளையல் என 10 3/4 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவகிரி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

25
ஈரோடு சிவகிரியில் இரட்டை கொலை

12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக குற்ற சம்பவம் நிகழ்ந்த இடம் உட்பட 60 கி.மீ தூரம் வரை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் கடந்த ஏப்ரல் 28,29,30ம் தேதிகளில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதே போன்று ராமசாமி வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கால் தடங்கள் உட்பட தடயங்களை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் குறித்து , முதல் கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது

35
காட்டிக்கொடுத்த சிசிடிவி- 4 பேர் கைது

அதில் அரச்சலூர் வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன்(48) பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகிரி கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலைக்கு கூட்டாளியாக செயல்பட்ட ஆச்சியப்பன் நண்பர்களான அரச்சலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

கொலை செய்து கொள்ளையடித்து சென்ற நகைகளை உருக்கி கொடுத்த சென்னிமலை பகுதியில் நகை கடை நடத்தி வரும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் ஆட்சியப்பன் ரமேஷ் மாதேஸ்வரன் மற்றும் ஞானசேகரன் என நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொலை செய்யப்பட்ட ராமசாமியின் செல்போன் மூன்று இருசக்கர வாகனங்கள், 103/4 நகைகள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய 2 மரக் கைப்பிடி மற்றும் கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

45
கொலை செய்ய நோட்டமிட்டது எப்படி.?

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கோவை சரக ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரச்சலூர் பகுதியில் ஆச்சியப்பன், ரமேஷ்,மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இருசக்கர வாகனங்கள், மரக்கட்டை கையுறை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. ராமசாமி செல்போன் இவர்களிடம் இருந்தது, கொலை நிகழ்ந்த இடத்தில் கிடைத்த கால்தடங்கள் அடிப்படையில் கொலை குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம். கொலை சம்பவம் முன்பு 15 நாட்கள் நோட்டமிட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னிமலை பகுதியை சேர்ந்த ஞானசேகரன் உருக்கி கொடுத்து உள்ளார். அவரையும் கைது செய்து உள்ளோம் அவரிடம் இருந்து 82கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

55
நகைகளை மீட்ட போலீஸ்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் சேமலை கவுண்டன் பாளையத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பரில் முதியவர் தெய்வசிகாமணி அவரது மனைவி அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோரை கொலை செய்து அவர்களிடமிருந்து ஐந்தரை சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு மொபைல் போன் எடுத்துச் சென்றதும் இவர்கள் மூன்று பேரும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

ஆச்சியப்பன் உட்பட மூன்று பேரும் தேங்காய் உரிப்பது, தோட்டத்தில் வேலை செய்வது தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு செய்து வந்துள்ளனர். தற்போது சிவகிரி கொலை வழக்கில் மட்டுமே தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணையில் இந்த மூன்று பேரும் வேறு ஏதேனும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத வழக்குகளில் தொடர்புடையவர்களாக என்று தெரிய வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories