எதிர்பாரா சூப்பரான திட்டத்தை வெளியிட்ட அரசு.! தாகம் தீர்க்க குடிநீர் ஏடிஎம்- எங்கெல்லாம் தெரியுமா.?

Published : May 19, 2025, 12:31 PM IST

வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை அமைத்து வருகிறது. 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

PREV
15
கொளுத்தும் வெயில்- தமிழக அரசின் சூப்பர் திட்டம்

வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் செல்லும் போது தண்ணீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது. குறைந்தது 20 ரூபாய் கொடுத்தே கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலை உள்ளது.  எனவே தண்ணீரை அதிகளவு பணம் கொடுத்து வாங்க மக்கள் தயங்கி வரும் நிலையில்,

 தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் படி, சென்னையின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது.

25
சென்னையில் 50 இடங்களில் வாட்டர் ஏடிஎம்

தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது. 

இந்த தீர்வு கானும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் வாட்டர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்து வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

35
24 மணி நேர தடையற்ற RO+UV கிருமி நீக்கம் செய்த குடிநீர்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. 

24 மணி நேர தடையற்ற RO+UV கிருமி நீக்கம் குளிர்ந்த தூய நீரை உறுதி செய்கிறது. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான, நீடித்த மற்றும் எளிதான நிறுவலுக்கான கேபினட் மாதிரி வடிவமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

45
எந்த எந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்

முதல் கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 40 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதம் 10 இடங்களில் விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
150 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் வரை

இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 250 குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories