20 பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்.! இரவு நேரத்தில் தொடர்ந்த இச்சை- திமுக நிர்வாகியின் மீது பகீர் புகார்

Published : May 19, 2025, 10:34 AM IST

திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

PREV
14
திமுக நிர்வாகி மீது பாலியல் புகார்

திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அரக்கோணத்தை சேர்ந்த பெண் புகார் கொடுத்துள்ளார். அம்மோநு செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண், திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாகவும்  வேதனையோடு தெரிவித்துள்ளார்.

24
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை இல்லை

இது தொடர்பாக அரக்கோணத்தில் எங்கு மனு கொடுத்தாலும் நடவடிக்கை என்பது எடுக்கவில்லை என  தெரிவித்துள்ளார். குறிப்பாக அரக்கோணத்தில் திமுக கட்சியை சேர்ந்த தெய்வ செயல் மீது பலமுறை புகார் கொடுத்தும் பல இடங்களுக்கு சென்றும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

தான் கொடுத்த புகாரை ஏற்க மறுத்த காவலர்கள் என் தந்தை கொடுத்த மனுவை வைத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த தெய்வ செயலை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

34
20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு

 சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அவனால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார். திமுகவில் இருந்தா என்ன வேண்டுமானாலும் செய்யலாமா நாங்கள் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டுமா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் பாதிக்கப்பட்ட பெண்களை தேர்வு செய்து ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால் எங்கு சென்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

44
டிஜிபி அலுவலகத்தில் புகார்

இது மட்டுமில்லாமல் அரசியல் வாதிகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் வற்புறுத்துவதாகவும் திமுக நிர்வாகி மீது புகார் தெரிவித்துள்ளார். தற்போது புகார் மனு டிஜிபி அலுவலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories