விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.! திறக்கப்போகுது மேட்டூர் அணை- தேதி குறித்த ஸ்டாலின்

Published : May 19, 2025, 01:05 PM IST

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

PREV
14
விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி

விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பது காவிரி ஆறாகும், கர்நாடகாவில் இருந்து பாய்ந்து வரும் நீரை தேக்கி வைத்து பாதுகாக்கும் அரணாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பாசனம் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்போகிறது என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. முதலமச்சர் ஸ்டாலின் இன்று பருவமழை ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ள நிலையில், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

24
மேட்டூர் அணை திறப்பு எப்போது.?

அதன் படி, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து, வேளாண்மை–உழவர் நலத்துறையைப் பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

34
தூர்வாரும் பணிகளை விரைந்து முடியுங்கள்

எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால், வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும்,

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண் களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

44
குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம்

அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories