2021 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தலின் போது வீரமணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.
24
சென்னை உயர்நீதிமன்றம்
அதனடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தாம் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
34
பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்கள்
இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவலில் இருந்து ரூ.14.30 கோடி வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிகக்கப்பட்டதால் அது தொடர்பாக மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீங்கள் ஒன்றும் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.