போடியில் மூன்று முறை ஜெயிச்ச முன்னாள் முதல்வரை தோற்கடிக்கணும்! முதல்வர் ஸ்டாலினின் ஆவேசமும்! ஓபிஎஸ் ரியாக்ஷனும்!

Published : Nov 15, 2025, 06:44 AM IST

2026 சட்டமன்ற தேர்தலுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, ஓபிஎஸ் தொகுதியான போடிநாயக்கனூரை கைப்பற்ற திமுகவினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

PREV
14
உடன்பிறப்பே வா

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் இப்போதே அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த நிகழ்வின் போது, ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து முதல்வர் குறைகளையும், தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார். இதுவரை 81 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

24
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அந்த வகையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூர், போடிநாயக்கனூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனையின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான விடியல் பயண திட்டம் உள்ளிட்ட நம்முடைய அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

34
போடிநாயக்கனூர் தொகுதி

அதேபோன்று, போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்று முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ, இந்த முறை திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்று அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் கண்டிப்புடன் கூறினார்.

44
மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளிக்கையில்: 2026-ல் போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றவேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories