திமுகவை ஜெயிக்க வைத்தவருக்கு இப்படியொரு நிலையா.? பீகாரில் புஸ் ஆன பிரசாந்த் கிஷோர் - என்ன காரணம்?

Published : Nov 14, 2025, 04:20 PM IST

மூன்று ஆண்டு பாத யாத்திரை மற்றும் பிரச்சாரத்திற்குப் பிறகும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பீகார் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
16
பிரசாந்த் கிஷோர் தோல்வி

மூன்று ஆண்டுகள் பாத யாத்திரை, கூட்டங்கள், கிராமங்கள் தோறும் பிரச்சாரம்... இத்தனை குரல் எழுப்பியும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பீகார் தேர்தல் 2025-ல் ஒரு சீட்டுக்கூட வெல்ல முடியாமல் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பங்கு பட்டியலிலும் கட்சியின் பெயரே தென்படாத அளவுக்கு பாதிப்பு இருந்தது. அதிக எதிர்பார்ப்பில் தொடங்கிய இயக்கம் எப்படி இப்படிச் சரிந்தது? இதற்கான முக்கிய காரணங்கள் உள்ளன.

26
மக்களிடையே செல்வாக்கு

ஜன் சுராஜ் கூட்டங்களில் கூட்டம் பெரிதாக இருந்தது. பிரசாந்த் கிஷோர் பேசும் மேடைகளில் மக்கள் ஆரவாரம் இருந்தது. ஆனால் அந்த ஆர்வத்தை மாற்றும் பூத் நிலை அமைப்பு கட்சியில் இல்லை. பீகார் அரசியல் முழுவதும் ஜாதி நெட்வொர்க், குடும்ப நம்பிக்கை, உள்ளூர் தலைவர்கள் மீது தான் இயங்குகிறது. ஆனால் பிரசாந்த் கிஷோரின் இயக்கம் காண்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தாலும், நல்ல வேலையைச் செய்யும் அமைப்புச் சக்தி இல்லாதது பெரிய இழப்பு.

36
நடுத்தர தலைவர்கள் இல்லை

ஜன் சுராஜை முழுவதும் பிரசாந்த் கிஷோர் ஒருவரே தாங்கினார். உதாரணமாக மாவட்டந்தோறும் ஒன்றுக்கு ஒரு வலுவான தலைவர்கள், நடுத்தர கட்ட அமைப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் ‘கிஷோர்’ என்பதைத்தவிர வேறு யாரையும் அறிந்திருக்கவில்லை. பீகார் போன்ற மாநிலங்களில் ஒரு தலைமுறை நேரம் செலவழித்து நிலைநிறுத்தப்பட வேண்டிய பணியை பிரசாந்த் கிஷோர் மிக வேகமாக முடிக்க முயன்றது தோல்விக்கு காரணம்.

46
பிரசாந்த் கிஷோரின் பிரச்சாரம்

“பீகாருக்கு அரசியல் தேவை” என்ற பிரசாந்த் கிஷோரின் பிரச்சாரம் ஆரம்பத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரே செய்தியாக மாறி, திட்டம் என்ன? கூட்டணி யார்? ஆட்சிக்கு வந்தால் எப்படி செயல்படுவார்? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை மக்களை குழப்பியது. பெரிய கூட்டத்திற்கு வந்த மக்கள், வாக்கு செலுத்தும்போது வேறு கட்சிக்கு வாக்களித்தது இதற்கு காரணம்.

56
நிதிஷ்–தேஜஸ்வி போட்டி

பிரசாந்த் கிஷோர் வளர்ச்சி, வேலை, இடம்பெயர்வு போன்ற அம்சங்கள் முன்னிறுத்தினார். ஆனால் பீகாரில் தேர்தல் இன்று ஜாதி கணக்கில்தான் இயங்குகிறது. அதற்கான எதிர் கூட்டணியை அவர் உருவாக்க முடியவில்லை. மேலும், முன்பு பல கட்சிகளுக்கு ஆலோசனை செய்தவர் என்பதால், “அவர் யாரின் பக்கம்?” என்ற சந்தேகம் மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது. நிதிஷ்–தேஜஸ்வி போட்டி மையமாக இருந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தன் பக்கத்தை உருவாக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்டார்.

66
மக்களுக்கு நம்பிக்கை குறைவு

அனைத்து கூட்டங்களிலும் பிரசாந்த் கிஷோர் பேசினார், மாற்றத்தைப் போதித்தார். ஆனால் ஒரு இடத்திலும் நேரடியாக போட்டியிடவில்லை. “அவருக்கே நம்பிக்கை இல்லையா?”, “ஒரு தலைவனே போட்டியிடவில்லை, இவர் பின்னல் எப்படிச் செல்வது?” என்ற சந்தேகம் அவரை ஆதரிக்க வந்தவர்களிடமே எழுந்தது. ஜன் சுராஜின் பல வேட்பாளர்கள் சக்திவாய்ந்த உள்ளூர் தலைவர்களாக இல்லாததும் கட்சியை மேலும் பலவீனப்படுத்தியது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை முதல்வராக்க பின்னால் இருந்து வேலை செய்தவர் தற்போது தன்னுடைய சொந்த மாநிலத்தில் மண்ணை கவ்வியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories