அதிமுக பிரமுகர் மனைவியின் கொ*லை வழக்கில் எதிர்பாராத திருப்பம்! பின்னணியில் கணவர்!

Published : Nov 14, 2025, 01:34 PM IST

கோவையில் அதிமுக பிரமுகர் கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் விவாகரத்து மறுப்பு காரணமாக, சொத்து தருவதாகக் கூறி ஓட்டுநர் மூலம் இந்த கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது.

PREV
15
அதிமுக பிரமுகரின் மனைவி

கோவை மாவட்டம் பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி(47). இந்த தம்பதிக்கு சஞ்சய் (21) என்ற மகனும், நேத்ரா என்ற (15) மகளும் உள்ளனர். இதில் மகன் பொறியியல் கல்லூரியிலும், மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்துள்ளார்.

25
மகேஸ்வரியை கொலை செய்த கார் ஓட்டுநர்

கவி சரவணகுமார் மற்றும் மகேஸ்வரி இடையே கருத்து வேறுபாடு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கவி சரவணகுமார் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இவர்களது வீட்டில் ஓட்டுநராக வேலை செய்து வந்த சுரேஷ் (45) என்பவர் அக்டோபர் மாதம் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தடாகம் காவல் எல்லைக்கு உட்பட்டது என்பதால் தடாகம் போலீசாரிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டார்.

35
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை செய்து வந்த சுரேஷ் எதற்காக மகேஸ்வரியை கொலை செய்தார் என விசாரணை நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசாரணையில், கவி சரவணக்குமாருக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கவி சரவணக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

45
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

இதனால் கவி சரவணக்குமார் வீட்டிற்கு வராமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் மகேஸ்வரி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட அதிமுக பிரமுகர் கவி சரவணகுமார், ஓட்டுநர் சுரேஷ் மூலம் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள தனக்கு சொந்தமான கவி சேம்பரையும் கொடுப்பதாக கவி சரவணக்குமார் கூறியதாக விசாரணையில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

55
அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் கைது

இதனையடுத்து அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமாரை தடாகம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ஓட்டுநர் மூலம் கணவர் கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories