Published : Jul 11, 2025, 12:29 PM ISTUpdated : Jul 11, 2025, 12:31 PM IST
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் காரணமாக கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தான் தலைவர் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் உச்சம் பெற்றுள்ளதால் பாமக இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிர்வாகிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். அந்த வகையில் பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தேர்தல் ஆணையத்தில் தான் தான் பாமகவின் தலைவர் என கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அன்புமணியோ பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தான் தான் தலைவர் என கூறி வருகிறார். மேலும் ராமதாஸ் தனது பெயரை அன்புமணி பின்னால் பயன்படுத்தகூடாது என தெரிவித்திருந்தார்.
25
தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி
ஆனால் அன்புமணியோ பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தான் தான் தலைவர் என கூறி வருகிறார். மேலும் ராமதாஸ் தனது பெயரை அன்புமணி பின்னால் பயன்படுத்தகூடாது என தெரிவித்திருந்தார். இவ்வளவு குழப்பத்தின் மத்தியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக ராமதாஸ் மயிலாடுதுறை சென்ற நேரத்தில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்துக்கு அன்புமணி திடீரென சென்றது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
35
ராமதாஸ் பேட்டி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில்: பூம்புகாரில் இது போன்ற மாநாடு 13 முறை நடந்துள்ளது. சற்று இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிர் மாநாடு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பெண்மையைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்திய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். அன்புமணி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பாமக எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறினார். மேலும் பாமகவில் தற்பொழுது நிலவும் குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறிய அவர் தொண்டர்களுக்குள் குழப்பமே இல்லை. அன்புமணி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு போக போக தெரியும் என பாடல் மூலம் பதில் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு பத்து காக்கா பறந்தது அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா அதுதான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார். கோவில் நிலம் அதிகமாக இருந்தால் கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை என கூறியுள்ளார்.
55
வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில்லையே? குறித்த கேள்விக்கு இதுகுறித்து அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறோம். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது. நாங்கள் இது குறித்து வலியுறுத்துவோம். பிரதமர் என்னுடைய நண்பர். கேட்டு வாங்குவேன். கேட்டால் கிடைக்கும். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.