தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில், 34 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வின் மூலம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை கல்வி வளர்ச்சியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது, அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 19,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லையெனவும் இது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் பின்தங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் 2,994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையெனவும் புள்ளி விவரம் கூறப்படுகிறது.
25
ஆசிரியர் காலிப்பணியிடம்
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடம் காரணமாக பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் கல்வித்தரத்தை பாதிப்பதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, குறிப்பாக வட மாவட்டங்களில், பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் தாமதம் ஏற்படுவதற்கு அரசின் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2025-2026 கல்வி ஆண்டில், 294 ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், மாவட்டங்களிடையே மாறுதல் கலந்தாய்வு மூலம் 153 மேல்நிலை மற்றும் 42 உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் விருப்பமான மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.
35
தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
இந்த நிலையில் இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 34 தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து மாவட்ட கல்வி அலுவலராக பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில், மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நிரப்பப்படவேண்டிய மொத்தக் காலிப்பணியிட '60' என அரசளவில் நிர்ணயம் செய்து அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை ஒப்புதல் அளித்து அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
45
பதவி உயர்வோடு ஊதிய உயர்வு
34 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் வழங்கியும். மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலையில் உள்ள பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் நிலை-23 (ரூ.56.900/-ரூ.2.09.200/-) ஆகும். தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் பதவி உயர்வு பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அடிப்படை விதி 22(B)-இன்படி ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ளத் தகுதியுடையவராவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர் தனது பணியிடப் பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்றிட அறிவிக்கப்படுகிறது.
55
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளிப் பொறுப்பினை ஏற்கும் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் உண்டியல் ஏற்பளிப்பது உட்பட முழுக் கூடுதல் பொறுப்புடன் மறு ஆணைகள் பிறப்பிக்கப்படும் வரை மேற்கொள்வதற்கு செயல்பட அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் ஏற்கனவே மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பின்.
அவர்கள், சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலரிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு பணிவிடுப்பு பெற்று புதிய பணியிடத்தில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே போல 24 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி இடம் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளது.