தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எப்படி ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக பல்வேறு வியூகங்களுடன் தயாராகி வருகின்றன. திமுக பொறுத்த வரையில் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதாவது காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு மற்றும் கூடுதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளது.
25
அதிமுக - பாஜக கூட்டணி
அதேபோல் அதிமுக இனி எந்த காலத்திலும் பாஜக கூட்டணி இல்லை கூறி வந்த எடப்பாடி பழனிசாமி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவில் அப்பா, மகனுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதால் யாருடன் கூட்டணி அமைக்க உள்ளனர் என்பது தெரியவில்லை. மேலும் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
35
மிழக வெற்றிக் கழகம்
சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க உள்ளதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் பல்வேறு தரப்பில் கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியுள்ளதால் ஒரு சில கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சி உள்ளது என்பது இதுவரை தெரியாத நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
55
கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை
அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.