புதுக்கோட்டையில் அகல்விளக்கு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் நலனுக்காக பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை தொடரும் என்றும் அறிவித்தார்.
புதுக்கோட்டையில் அகல்விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: ஒரு திட்டம் சென்னை போன்ற தலைநகரிலோ அல்லது திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் தான் எப்போது அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் தான் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியதால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அகல் விளக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
24
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரது கையிலும் போன் உள்ளது. மொபைல் போனுக்கு நாம் அடிமையாகி உள்ளோம். பெண் பிள்ளைகள் மிகுந்த கவனமாக இருக்க கூடிய காலகட்டம். டெக்னாலஜி வரமாகவும் சில நேரத்தில் சாபமாகவும் இருக்கிறது. ஒரு லிங்கை கிளிக் செய்தால் பரிசு பொருள் கிடைக்கும் பணம் கிடைக்கும் என்று எண்ணி அதனை தொட வேண்டாம் எப்பொழுது உழைத்தால் தான் ஊதியம் கிடைக்கும். வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் தான் கூறும். வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும், அதனால் புத்தகத்தை படியுங்கள். ஒரு தவறான புகைப்படத்தில் உங்களது முகம் வருகிறது உடனடியாக நீங்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடக்கூடாது. சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதித்த பெண்களை பற்றி தெரிந்து கொண்டு அவர்களை ரோல் மிடலாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
34
பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: மாணவர்கள் மனப்பாடமின்றி புரிதலோடு தேர்வு எழுத வேண்டும். அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாகவோ, கண்மூடித் தனமாகவோ மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட எதையும் எதிர்க்கவில்லை. மாணவர்களின் தேவையை அறிந்துதான் செய்கிறோம். தமிழக அரசு செய்துள்ள நல்லவற்றை மத்திய அரசும் எடுத்துக்கொள்ள வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கு நிதி தருவேன் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல. 3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், இடை நிற்றல் விகிதத்தை அதிகரிக்கும். அதனால்தான் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று உள்ளது. அதிலும், எதையும் படிக்காமல் அடுத்த வகுப்புக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு வகுப்புக்கும் சர்வே எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.