AIADMK: நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா? அதிர்ச்சியில் இபிஎஸ்!

Published : May 26, 2026, 10:54 AM IST

AIADMK: மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில் மேலும் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்

முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது வலுவாக இருந்த திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சிமைக்க உதவியது. இதில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவை இடம் பெற்றதை அடுத்து திமுக கூட்டணி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 

25
தேர்தலுக்கு பிறகு இரண்டாக உடைந்த அதிமுக

அதேபோல் அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினரும், இபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் 25 தவெகவிற்கு ஆதரவு அளித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

35
3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி சபாநாயகரிடம் தகுதி நீக்க மனுக்களை அளித்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று தலைமை செயலகம் வந்தனர். பின்னர் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரனை சந்தித்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தது.

45
இன்று இசக்கி சுப்பையா ராஜினாமா செய்கிறார்

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இபிஎஸ் அடுத்த அதிர்ச்சி வந்துள்ளது. அதிமுக சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 முதல் 6 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

55
யார் இந்த இசக்கி சுப்பையா.?

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரத்தில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. இவர் ஏற்கெனவே 2011 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2011ல் அப்போது முதல்வராக ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கி இருந்தார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசியலில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பல்வேறு தொழில்களை இசக்கி சுப்பையா செய்து வருகிறார். குற்றசாலத்தில் இவருக்கு சொந்தமாக சொகுசு விடுதி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories