இனி இபிஎஸ்-ஐ கிட்டகூட நெருங்க முடியாது! கூட்டணி தலைவருக்காக அமித் ஷா போட்ட பிளான்!

Published : Jul 05, 2025, 11:28 AM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

PREV
14
எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வந்ததை அடுத்து தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்பதால் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இனி எந்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திமுக வீழ்த்த வேண்டும் என்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. மேலும் இந்த அணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நமது கூட்டணி தான் மெகா கூட்டணியாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அடித்து கூறிவருகிறார்.

24
தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கும் அவர் 23-ம் தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.

34
இசட் பிளஸ் பாதுகாப்பு

பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களது பயணத்தை வேன் அல்லது காரில் தான் மேற்கொள்வார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனது பயணத்தை பேருந்தில் மேற்கொள்கிறார். அதற்காக பேருந்து ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு விதிப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு 22 பேர் கமாண்டோக்களாக சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் வீடு, தங்கும் இடம் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவருக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.

44
உள்துறை அமைச்சர் அமித் ஷா

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories