தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. இத்திட்டம் தொழில் தொடங்க, கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்.
தமிழக அரசு பல்வேறு பிரிவினருக்காக, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பல கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை மக்களின் பொருளாதார மேம்பாடு, தொழில் தொடங்குதல், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் தனிநபர் கடனாக தொழில், வியாபாரம் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்காக. சிறு, குறு விவசாயிகளுக்கான கடன், மாணவர்களின் உயர்கல்விக்கு என கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
25
குறைந்த வட்டியில் கடன் உதவி
இந்த கடன் உதவி திட்டங்கள் மூலமாக குறைந்த வட்டி விகிதம், மானியத்துடன் கூடிய கடன்கள் கிடைக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. 2022-23 நிதியாண்டில் ரூ.25,219 கோடி கடன் வழங்கப்பட்டு 4,39,349 குழுக்கள் பயனடைந்தன. 2023-24ல் கடன் உதவி ரூ.30,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற கடன் உதவி திட்டங்கள் மூலமாக சுய தொழில் செய்து முன்னேற வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படுகிறுத. இந்த நிலையில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
35
15லட்சம் வரை தனிநபர் கடன்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தனி நபர் கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு சுயதொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக தனி நபர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சிறு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க அல்லது மேம்படுத்த அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியானது சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவியாக அளிக்கப்படுகிறது. இந்த கடன் உதவியை திரும்ப செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள் என நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம்: ஆண்டுக்கு 6% (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும்).