பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 7ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

Published : Jul 05, 2025, 08:12 AM IST

சோளிங்கர் யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 7ம் தேதி சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
பள்ளி மாணவர்கள்

பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை என்ற விவரத்தை வெளியிட்டது. அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
உள்ளூர் விடுமுறை

அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஜூலை 07ம் தேதி அன்று நடைபெறுகிறது.

44
பள்ளிகளுக்கு விடுமுறை

இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்திற்கு மட்டும், சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூலை 07ம் தேதி (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும். அன்றைய கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories