தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1ம் தேதி முதல் அமலாகும் சரண் விடுப்பு நடைமுறை

Published : Jul 04, 2025, 07:07 PM IST

ஈட்டிய விடுப்பு சரண் முறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

PREV
14
surrender of earned leave

தமிழ அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு சரண் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

24
surrender of earned leave

இந்நிலையில், முன்னதாகவே ஈட்டிய விடுப்பு சரண் முறை நடைமுறைக்கு வருகிறது. அரசு ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையை ஏற்று வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

34
surrender of earned leave

கொரோனா காலகட்டத்தில் அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்ததைக் காரணம் காட்டி அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையானது 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

44
surrender of earned leave

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி அமலாகும் விதிமுறையின்படி ஈட்டிய விடுப்பு நாள்களில் 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதால் தமிழக அரசுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories