தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் திமுக அமைச்சர்களை தாக்கி பேசிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்ற ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தலுக்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்பாகவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.
24
உருட்டுகளும், திருட்டுகளும்
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது இன்னிங்சாக “உருட்டுகளும், திருட்டுகளும்” என்ற பெயரில் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது எந்த அடிப்படையில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றே தெரியவில்லை. என் வீட்டில் சுமார் 4000 ரூபாய் மின்கட்டணம் கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது 12000 ரூபாய் மின்கட்டணம் வருகிறது.
34
பிஸ்கட்டை தூக்கி போட்டால் . . .
இந்த மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் நமது கட்சியில் இருந்து சென்றவர். குலைக்கின்ற நாய்க்கு பிஸ்கட்டை தூக்கி போட்டால் கவ்விக் கொண்டு செல்லும். அப்படி தான் அந்த அமைச்சர் இருக்கிறார். குறிப்பாக அமைச்சர் ரகுபதிக்கு நாவடக்கம் தேவை. உங்களை உருவாக்கிய அதிமுக பற்றி பேச உங்களுக்கு நா கூசவில்லை. அதிமுக பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இன்னும் 8 மாத காலம் தான் உங்கள் ஆட்சி. அதன் பின் உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதிவிடுவார்கள்.
காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அப்போது உங்களை யார் காப்பாற்றப்போகிறார்கள் என்று பார்ப்போம். குறிப்பாக திமுக அதன் நிர்வாகிகளை ஒருநாளும் காப்பாற்றியதாக சரித்திரமே கிடையாது. அதனால் தான் அதிமுக.வில் இருந்து செல்பவர்களுக்கு அங்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தால் அவனுக்கு சூடு, சுரணை வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் இருக்கும் அமைச்சர் ரகுபதியின் பேச்சை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.