காஞ்சிபுரம் அடுத்த குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி. இவரது கணவர் விஜய். தனியார் வங்கி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக் வீடியோ பதிவிட்டு வந்த அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவர் விஜய்க்கு தெரியவந்ததை அடுத்து மனைவி அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
25
இரண்டு குழந்தைகள் கொலை
இதனால் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்தை பார்க்க முடியாமல் பேச முடியாமலும் அபிராமி தவித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, அபிராமி கள்ளக்காதலனான மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 2018ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். இதில் கணவர் விஜய் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தது.
35
காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம்
இதனையடுத்து கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரத்தை தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சித்த போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முதலில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திலும் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திலும் சுமார் 7 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து தண்டனை விவரமும் வெளியானது. அதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
55
கைகளில் நெயில் பாலிஷ்
அப்போது தண்டனை விவரத்தை கேட்டு அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் கதறி அழுதனர். இவ்வளவு பரபரக்கும் மத்தியில் அபிராமி நீதிமன்றத்திற்கு வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்கள் அபிராமி சிறையில் இருந்தாலும் கைகளில் நீளமாக நகம் வளர்த்து பளபளவென நெயில் பாலிஷ் போட்டு, தலையில் எட்டு விதவிதமான கிளிப்புகள் அணிந்து வந்ததை பார்த்தால் குழந்தைகளை கொன்றதற்கான உணர்ச்சியே அவருக்கு இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.