இந்திய வரலாற்றில் இவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும், பாஜகவுடன் சேர்ந்து முறைகேடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளன.
பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக சமநிலையை சாய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது.