Published : Aug 15, 2025, 01:12 PM ISTUpdated : Aug 15, 2025, 01:22 PM IST
சினிமா நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். திமுக அரசை விமர்சித்தும், சர்ச்சைக்குரிய கருத்துகளால் வழக்குகளையும் சந்தித்த இவர், இப்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கஸ்தூரி, 1991ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த கஸ்தூரிக்கு இந்தியன், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை போன்ற படங்கள் பெயர் வாங்கி கொடுத்தது.
மேலும் முன்னணி நடிகர்களான சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தவர் 2010இல் தமிழ்ப்படம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.
24
திமுக எதிர்ப்பாளராக கஸ்தூரி
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி எந்த ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைக்காமல், சுதந்திரமாக கருத்து தெரிவித்து வந்தார். தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டு சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.
ஆனால் தன்னை திமுக எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டவர் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆணவக் கொலைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
34
பாஜகவில் நடிகை கஸ்தூரி
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், அவர் மீது வழக்கு பதியப்பட்டு, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி இணைத்துக்கொண்டார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நடிகை கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.
சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.