புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் யாருடனும், கூட்டணி கிடையாது, தனித்துவமான மேடைப்பேச்சு என அவரது தனித்துவமான கொள்கைகளால் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது வருகிறார். ஆனால் அண்மை காலமாக சீமான் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விடுத்து புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், அதன் தொண்டர்கள், கட்சியின் தலைவர் விஜய் என ஒட்டுமொத்தமாக விஜய் கட்சியை டார்கெட் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விஜய் தொண்டர்களை அணில் கூட்டம் என்று கூறுவது, தற்குறி கூட்டம் என்று விமர்சிப்பது இளைஞர்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
23
நீங்கள் மட்டும் தான் தமிழர் என்பது போல் பேசாதீர்கள்
இந்நிலையில் சீமானின் செயல்பாடுகளுக்கு பிரபல நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லாரன்ஸ், “சீமானின் பேச்சுகள் ஏதோ அவர் மட்டும் தான் தமிழ் தாய்க்கு பிறந்தவர் போன்றும், மற்றவர்கள் அனைவரும் அமெரிக்கருக்கு பிறந்தவர் என்பது போல் பேசுகிறார். இது மிகவும் வருந்தக்கூடிய செயல். இதனை அவர் தொடர்ந்து செய்யக் கூடாது.
33
நான் நாட்டுக்காக பேசுபவன்
அரசியல் என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. பந்தய ரேசில் அனைவரும் ஓடி அதில் வெற்றிபெறும் நபர் தான் உண்மையான ஆண்மகன். ஆனால் யாருமே ஓடக்கூடாது. நான் மட்டும் தான் ஓடுவேன், நானே ஓடி, நானே வெற்றி பெறுவேன் என்று சொல்வது என்ன மனநிலை? நீங்கள் ஓட்டுக்காக பேசுகிறீர்கள் நான் ரஜினி ரசிகன், நாட்டுக்காக பேசுபவன். யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் அவர்களை வரவேற்று அரவணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.