ஆசிரியர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. பள்ளிக் கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்.. இனி சிக்கல் இல்லை!

Published : Sep 15, 2025, 08:04 PM IST

டெட் தேர்வு எழுத அரசு ஆசிரியர்கள் தடையில்லா சான்றிதழ் வாங்க தேவையில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. 

PREV
14
ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்தி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான டெட் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - Teacher Eligibility Test) எழுதுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

24
டெட் தேர்வால் ஆசிரியர்கள் அச்சம்

இந்த உத்தரவு தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. டெட் தேர்வுக்கு தற்போது பணியில் இருக்கும் அரசு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெட் தேர்வு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்து இருந்தன.

34
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

டெட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. ''உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு ஆசிரியர்களுக்கு என்றும் துணை நிற்கும். அதே வேளையில் எதிர்காலத்தில் டெட் தேர்வை தமிழக அரசு ஆதரிக்கும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

44
தடையில்லா சான்றுக்கு விண்ணப்பம்

பொதுவாக அரசு பணியில் இருப்பவர்கள் உயர்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தங்கள் துறையில் இருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இது தான் நடைமுறையாகும். அதன்படி டெட் தேர்வு எழுத விண்ணப்பிப்ப தயாராக இருந்த ஆசிரியர்கள் பலர் தேர்வு எழுத தடையில்லா சான்று எனக்கூறி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள்மகிழ்ச்சி

இந்நிலையில், டெட் தேர்வு எழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories