அன்புமணி தான் உண்மையான பாமக..! ஜிகே மணி...சேலம் அருள் கதி என்ன?

Published : Sep 15, 2025, 04:08 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணியின் அணியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களான ஜிகே மணி, அருள்ன் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

PREV
14
போட்டி போட்டு நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ், அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே தந்தை, மகன் இடையேயான மோதல் தீவிரமாக இருந்து வருகிறது. மோதலின் உச்சமாக ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் மாறி மாறி எதிர்தரப்பு நிர்வாகிகளை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

24
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ்

இதனிடையே அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தொடர்ந்து கட்சி விரோதப் பணிகளில் ஈடுபட்டு வந்த காரணத்தால் அவரிடம் விளக்கம் கேட்டு 16 கேள்விகள் அனுப்பப்பட்டன. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவும், குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. ஆகவே அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்வதாகக் கருதி அவரை கட்சியின் துணைத்தலைவர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக உத்தரவிட்டார். மேலும் அன்புமணி பாமக.வின் அடிப்படைத் தொண்டர் கூட கிடையாது என்றும் அறிவித்தார்.

34
வழக்கறிஞர் பாலு விளக்கம்

இது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அன்புமணியின் ஆதரவாளரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் பாலு, பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை பொதுக்குழுவல் தேர்வு செய்யப்படும் நபருக்கே முழு அதிகாரமும் உண்டு. அந்த வகையில் பாமக பொதுக் குழுவில் கட்சியின் தலைவராக நீடிக்க அன்புமணிக்கு மேலும் 1 ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கட்சியின் நிறுவனருக்கு கட்சி செயல்பாடுகளில் நிர்வாக ரீதியாக தலையிட எந்தவித உரிமையும் கிடையாது. ஆகவே அன்புமணியே கட்சியின் தலைவர் என்று தெரிவித்திருந்தார்.

44
கேள்விக்குறியாகும் ஜிகே மணி, அருள் எதிர்காலம்

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு தேர்தல் ஆணையம் தரப்பில் எங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எங்கள் அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது. ஆகவே தேர்தல் ஆணையமே எங்களை அங்கீகரித்துவிட்டது. இனி பாமகவில் இரு அணிகள் கிடையாது. நாங்கள் மட்டும் தான் பாமக. பொதுக்குழு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருலாளர் என எங்களுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் பாலுவின் இந்த அறிவிப்பு ராமதாஸ் ஆதராவளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமதாஸ் வசம் உள்ள சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆகியோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories