20 வயசுல இதெல்லாம் தேவையா! வசமாக சிக்கிய கும்மிடிப்பூண்டி சுப்ரியா! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

Published : Sep 15, 2025, 04:07 PM IST

Jewellery Theft: கும்மிடிப்பூண்டியில் மூதாட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.80 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில், எதிர்வீட்டு இளம்பெண் சுப்ரியா என்பவர் மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்தது தெரியவந்தது. 

PREV
14
இளம்பெண் சுப்ரியா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி(87). இவருக்கு கோடிக்கணக்கில் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மூதாட்டி மூச்சு பேச்சு இல்லாமல் ராஜேஸ்வரி மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

24
மூதாட்டி ராஜேஸ்வரி

அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த குற்றசம்பவத்தில் ஈடுபட்டது புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாட்டியின் எதிர்வீட்டில் வசிக்கும் இளம்பெண் சுப்ரியா (20) என்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

34
சுப்ரியா கைது

மூதாட்டியிடம் இருந்து திருடிய நகைகள் மற்றும் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாரிடம் சுப்ரியா அளித்த வாக்குமூலத்தில்: திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை மற்றும் கணவருடன், புது கும்மிடிப்பூண்டியில் வாடகை வீட்டில் சுப்ரியா வசித்து வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் இருந்த மூதாட்டி ராஜேஸ்வரியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

44
புழல் மத்திய சிறையில் அடைப்பு

இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி ராஜேஸ்வரி வீட்டிற்கு சுப்பிரியா சென்று கடனாக ரூ.10,000 கேட்டுள்ளார். ஆனால் மூதாட்டி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரியா அவரை கீழே தள்ளிவிட்டு இரும்பு ராடால் தலையில் தாக்கியதில் மண்டை உடைந்தது மயங்கியுள்ளார். இதனையடுத்து வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 20 சவரன் மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை இளம்பெண் சுப்ரியா கொள்ளையடித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளம்பெண் சுப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories