மகளிர் உரிமை தொகை கேட்டு ஒரே நாளில் இவ்வளவு விண்ணப்பமா.!! ஷாக்காகி நிற்கும் தமிழக அரசு

Published : Jul 17, 2025, 07:50 AM IST

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே 50,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

PREV
14
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்

தமிழக அரசு மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் பெண்கள் சொந்தகாலில் நிற்க வேண்டும், சிறிய தேவைகளுக்காக யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது கடந்த 2023ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 56 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. திட்டத்தின் கீழ், 2025 ஜனவரி வரை சுமார் 1 கோடியே 14 லட்சத்து 65,525 பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.

24
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். 

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், , அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

34
வீடு தேடி வரும் திட்டங்கள்

உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 

எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டு வருகிறது.

44
ஒரே நாளில் 50ஆயிரம் பேர் விண்ணப்பம்

இந்த முகாம்களில் அதிகளவு பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காகவே பல ஆயிரம் பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதன் படி தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். 

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தமிழகம் முழுவதும் முதல் நாளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் குவிந்துள்ளது. இதில் முக்கிய அம்சமாக மகளிர் உரிமை தொகை கேட்டு 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முதல் நாளில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories