தீபாவளி ஜாக்பாட்.! இவ்வளவு தள்ளுபடியா.? அசத்தலான திட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்

Published : Sep 30, 2025, 12:16 PM IST

Co-optex Diwali sale : கோ-ஆப்டெக்ஸ், தீபாவளி சிறப்பு விற்பனையை 30% தள்ளுபடியுடன் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்த இந்த விற்பனையில், புதிய ரக பட்டு மற்றும் பருத்தி சேலைகள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. 

PREV
14

கோ-ஆப்டெக்ஸ் என்பது தமிழ்நாட்டின் பிரபலமான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாகும், இது தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காந்தி துறையின் கீழ் இயங்குகிறது. இந்த சங்கத்தின் கடைகள் (ஷோரூம்கள்) முழுவதும் தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்டவை உள்ளன,

 மேலும் இந்தியாவின் முன்னணி கைத்தறி நிறுவனமாக திகழ்கிறது. காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்களின் உழைப்பால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பட்டு சேலைகள், டோத்திகள், பெட்ஷீட்டுகள், டவல்கள் போன்றவை கிடைக்கின்றன.

24

இந்த நிலையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடிகள் நடத்தப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களை பெரிய வகையில் ஈர்க்கிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் காஞ்சிபுரம் கிளையில் 2024-2025ம் ஆண்டில் சுமார் ரூ .74 லட்சம் அளவிற்கு சில்லரை விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லெனான் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் போர்வைகள், போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியன விற்பனைக்கு உள்ளன.

34

மிக முக்கிய பண்டிகையான தீபாவளி சிறப்பு விற்பனை அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. தூய பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ.8000 முதல் ரூ.40000 வரையில் பல வண்ணங்களில் குறைந்தே விலைக்கே வழங்கப்படுகிறது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

44

மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும் என்று அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி மன்ற குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories