பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?

Published : Jan 07, 2026, 07:15 AM IST

School College Holiday: படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

PREV
14
ஹெத்தையம்மன் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகையின் போது விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.

24
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

34
உள்ளூர் விடுமுறை

அதாவது நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை பெறுவதையொட்டி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
அரசு அலுவலகங்கள் செயல்படும்

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories