நீலகிரி மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதே வேளையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.
24
நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட்
இந்நிலையில், நீலகிரி மாவடத்தில் நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகமான கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
34
மழை பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு
மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு தேசிய மீட்பு படையினரும் விரைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி, 0423-2450034, 24500335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம். கோட்ட வாரியாக ஊட்டி 0423-244 5577, குன்னூர் 220 6002. ஊட்டி 244 2433 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெவித்துள்ளது.
நாளை நீலகிரி மட்டுமின்றி கோவையிலும் அதி கனம்ழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.