இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக தென்காசி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களி நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 15) என்று 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர்
இந்த இரண்டு நாட்களும் நீலகிரியில் பலத்த மழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். ஆற்றோரம் உள்ள மக்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.